ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செய்திகள்

வியாழன், 9 ஜனவரி, 2014

துப்புரவுத் தொழிலாளர்களை ஒடுக்கும் மோடி அரசு கண்டனம் முழங்க சிஐடியு அழைப்பு

துப்புரவுத் தொழிலாளர்களை ஒடுக்கும் மோடி அரசு
கண்டனம் முழங்க சிஐடியு அழைப்பு
திண்டுக்கல், ஜன. 9 -குஜராத்தில் துப்புரவு தொழிலாளர்கள் மீது அடக்கு முறையை ஏவியுள்ள பாஜக மோடி அரசைக் கண்டித்து, தமிழகத்தில் இயக்கம் நடத்திட தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சம்மேளனம் (சிஐடியு) அழைப்பு விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சம்மேள னத் தலைவர் மூசா, பொதுச் செயலாளர் கே.ஆர்.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:குஜராத்தில் உள்ளஅகமதாபாத் மாநகராட்சி யில் கடந்த 20 ஆண்டுகளுக் கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் கொத்தடிமைகளைப் போல துப்புரவுத் தொழிலாளர் கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் பணிபுரிந்தால் ரூ.105/-, 8 மணி நேர வேலைக்கு ரூ.210/ மட்டுமே கூலியாக தரப்படுகிறது. பணிநிரந்தரம் செய்யாததுடன் இ.எஸ்.ஐ, பி.எப் உள்ளிட்ட சலுகைகளை அமலாக்க மறுத்து வருகிறது. மத்திய அரசின் மக்கள் விரோத புதிய தாராளமயக் கொள்கையை குஜராத்தில் உள்ள மோடி அரசாங்கம் தீவிரமாக அமலாக்குவதன் விளை வாக அம்மாநிலத்தில் உள்ள பெரும்பாலான துப்புரவு தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக எவ்வித சட்டஉரிமையும் இல்லாத முறையில் பணியாற்றி வரு கின்றனர். பலமுறை அரசிற்கு கோரிக்கை வைத்தும் துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய மறுத்து விட்ட மோடி அரசை கண்டித்துதொழிலாளர்கள் கடந்த டிசம்பர் 31-ந் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு வாரத்திற்கும் மேலாக வேலைநிறுத்தம் தொடர்ந்து நடைபெறுகிறது. வேலை நிறுத்த கோரிக்கைகளை விளக்கி கூட்டம் நடத்திய துப்புரவு தொழிலாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அச்சுறுத் தப்பட்டனர். மோடி அரசாங் கத்தின் தொழிலாளர் விரோதநடவடிக்கையை உள்ளாட் சித்துறை ஊழியர்கள் சம்மேளனம்(சிஐடியு) கண்டிக் கிறது.பணிநிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி போரா டும் அகமதாபாத் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் சார்பாக ஆதரவு இயக்கங்கள் நடத்தவும், போரா டும் தொழிலாளர்களை கைது செய்து அச்சுறுத்தும் மோடி அரசாங்கத்தை கண்டித்து தொழிலாளர்கள் மத்தியில் துண்டுபிரசுரங்களை விநி யோகித்து பிரச்சாரத்தில் ஈடு பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக