ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செய்திகள்

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

கொமராபாளையம் நகராட்சி நிர்வாகம் அப்சென்ட் என்ற பெயரில் தொழிலாளர்களை மிரட்டுகிறது

நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களை மாற்று  வேலைக்கு அனுப்பாதே.
                                                                                                                                    துப்புரவுபணிக்கு என்று எடுக்க பட்ட   தொழிலாளர்களை துப்புரவு பணிக்கே நியமனம் செய்  

  P F லோன் எடுக்க பணம் கேட்கும் துப்புரவு  ஆய்வாளர்   துப்புரவு மேற்பார்வையாளர் கிளார்க்  H. 1 போன்ற  அதிகாரிகள்   மீது நடவடிக்கை  எடு

  ஒரு துப்புரவு தொழிலாளி ஒருநாள் விடுமுறை  எடுத்தால் 300 ரூபாயும் அரைநாள்  விடுமுறை  எடுத்தால் 150 ரூபாயும்  கேட்கும் துப்புரவு  மேற்பார்வையாளர் கள் மீது நடவடிக்கை  எடு

    துப்புரவு   தொழிலாளர்களுக்கு சுரண்டி, விளக்குமாறு, மண்வெட்டி,பிக்கேஸ்,சவுலு,குச்சி,போன்ற உபகரணங்கள்,நகராட்சி நிர்வாகமே வழங்க வேண்டும்,ஆனல் தொழிலாளர்களே  உங்கள் சம்பளத்தில் வாங்கிக்கொள்ளவேண்டும் என்று கூறும் ஆனையாளர் மீது தமிழக அரசு நடவடிக்கை  எடு  

 நகராட்சி எல்லைக்குட்பட்ட நான்கு டிவிசன் பகுதிகளில் நகராட்சி கட்டிடம் இருக்கும்போது கண்ட கண்டஇடத்தில் மஸ்ட்ரோல் எடுபாதை கைவிடக ,

  ஐந்து துப்புரவு  ஆய்வாளர்கள் ஒரே பகுதியில்  பல ஆண்டுகள் வேலை செய்யும் மர்மம் என்ன?    

  எட்டு துப்புரவு  மேற்பார்வையாளர்களை ஒரே டிவிசனில் வைத்து பல ஆண்டுகள் வேலை செய்யும் மர்மம் என்ன?

  துப்புரவு தொழிலாளர்களை  வீட்டு வரி வசூலிக்க அனுப்பும் பட்சத்தில் மற்ற தொழிலாளர்களுக்கு வேலை பளு அதிகரித்து வேலை வாங்குவதால் உடல் நிலை பாதிக்க படைகிறார்கள், வீட்டு வரி வசூலிக்க தனியாக ஆட்களை  நியமணம்  செய்

மலேரியா  பிரிவில்  பனிபுரியும்  தொழிலாளர்களை மஸ்ட்ரோலில் கையெழுத்து பெற்றுக்கொன்று மேல்அதிகாரி வீட்டு வேலைக்கு பயன் படுத்தாதே,

குப்பை எடுக்கும் வாகனத்திற்கு  நிரந்தர டிரைவரை பயன் படுத்து,துப்புரவு   தொழிலாளியை  டிரைவர் வேலைக்கு பயன் படுத்தாதே,

வியாழன், 9 ஜனவரி, 2014

துப்புரவுத் தொழிலாளர்களை ஒடுக்கும் மோடி அரசு கண்டனம் முழங்க சிஐடியு அழைப்பு

துப்புரவுத் தொழிலாளர்களை ஒடுக்கும் மோடி அரசு
கண்டனம் முழங்க சிஐடியு அழைப்பு
திண்டுக்கல், ஜன. 9 -குஜராத்தில் துப்புரவு தொழிலாளர்கள் மீது அடக்கு முறையை ஏவியுள்ள பாஜக மோடி அரசைக் கண்டித்து, தமிழகத்தில் இயக்கம் நடத்திட தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சம்மேளனம் (சிஐடியு) அழைப்பு விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சம்மேள னத் தலைவர் மூசா, பொதுச் செயலாளர் கே.ஆர்.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:குஜராத்தில் உள்ளஅகமதாபாத் மாநகராட்சி யில் கடந்த 20 ஆண்டுகளுக் கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் கொத்தடிமைகளைப் போல துப்புரவுத் தொழிலாளர் கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் பணிபுரிந்தால் ரூ.105/-, 8 மணி நேர வேலைக்கு ரூ.210/ மட்டுமே கூலியாக தரப்படுகிறது. பணிநிரந்தரம் செய்யாததுடன் இ.எஸ்.ஐ, பி.எப் உள்ளிட்ட சலுகைகளை அமலாக்க மறுத்து வருகிறது. மத்திய அரசின் மக்கள் விரோத புதிய தாராளமயக் கொள்கையை குஜராத்தில் உள்ள மோடி அரசாங்கம் தீவிரமாக அமலாக்குவதன் விளை வாக அம்மாநிலத்தில் உள்ள பெரும்பாலான துப்புரவு தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக எவ்வித சட்டஉரிமையும் இல்லாத முறையில் பணியாற்றி வரு கின்றனர். பலமுறை அரசிற்கு கோரிக்கை வைத்தும் துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய மறுத்து விட்ட மோடி அரசை கண்டித்துதொழிலாளர்கள் கடந்த டிசம்பர் 31-ந் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு வாரத்திற்கும் மேலாக வேலைநிறுத்தம் தொடர்ந்து நடைபெறுகிறது. வேலை நிறுத்த கோரிக்கைகளை விளக்கி கூட்டம் நடத்திய துப்புரவு தொழிலாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அச்சுறுத் தப்பட்டனர். மோடி அரசாங் கத்தின் தொழிலாளர் விரோதநடவடிக்கையை உள்ளாட் சித்துறை ஊழியர்கள் சம்மேளனம்(சிஐடியு) கண்டிக் கிறது.பணிநிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி போரா டும் அகமதாபாத் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் சார்பாக ஆதரவு இயக்கங்கள் நடத்தவும், போரா டும் தொழிலாளர்களை கைது செய்து அச்சுறுத்தும் மோடி அரசாங்கத்தை கண்டித்து தொழிலாளர்கள் மத்தியில் துண்டுபிரசுரங்களை விநி யோகித்து பிரச்சாரத்தில் ஈடு பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

புதன், 1 ஜனவரி, 2014

புதிய ஓய்வூதியம் சார்பாக அரசு வெளியிட்டுள்ள பரிந்துரைகளுக்கு, சந்தாதாரர்களின் கருத்து தெரிவிக்க உத்தரவு.

click here TO DOWNLOAD PFRDA - EXPOSURE DRAFT ON PROPOSEDOPERATIONAL WITHDRAWAL PROCESS FOR NPS SUBSCRIBERS 

தோழர்களே!

PFRDA 26/12/2013 அன்று புதிய ஓய்வூதிய தொழிலாளர்களின் ஓய்வூதியம் பெறுவது தொடர்பான தனது பரிந்துரையை தனது வலைதளத்தில் (pfrda.org.in) வெளியிட்டுள்ளது. இது குறித்து கருத்து ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் 31/01/2014ஆம் தேதிக்குள் k.sumit@pfrda.org.in என்கின்ற மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பும் படிஇதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு:

தொழிலாளர்களை கொத்தடிமையாக நடத்தும் மோடி அரசு துப்புரவுத் தொழிலாளர்கள் ஆவேசம்

தொழிலாளர்களை கொத்தடிமையாக நடத்தும் மோடி அரசு 
துப்புரவுத் தொழிலாளர்கள் ஆவேசம்

செவ்வாய், 31 டிசம்பர், 2013

Happy NEW year, 2014


ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை


விவரங்கள்
அமைச்சர்
photo
திரு கே.பி.முனுசாமி
நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரக கடன்கள், நகர்பகுதி மற்றும் ஊரக குடிநீர் வழங்கல், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள்,பணியாளர் & நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் லஞ்ச ஒழிப்பு.
தொலைபேசி : 25672866(O) EXTN-5689,24616292(R), 24616292 (தொலைப்பிரதி)