ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செய்திகள்

புதன், 1 ஜனவரி, 2014

தொழிலாளர்களை கொத்தடிமையாக நடத்தும் மோடி அரசு துப்புரவுத் தொழிலாளர்கள் ஆவேசம்

தொழிலாளர்களை கொத்தடிமையாக நடத்தும் மோடி அரசு 
துப்புரவுத் தொழிலாளர்கள் ஆவேசம்
அகமதாபாத்,டிச.31-மோடியின் குஜராத் மாநிலத்தில் தொழிலாளர்களை கொத்தடிமையாக நடத்தியதால் 5 ஆயிரம் துப்புரவுத் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங் கியுள்ளனர்.குஜாராத் முதல்வர் மோடி பாரதிய ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு மாநிலமாகச் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
அப்போது அவர் தனது குஜராத் மாநிலம் மற்ற மாநிலங்களை விட வளர்ச்சி அடைந்து விட்டதைபோல் மாய தோற்றதை உருவாக்கி வருகிறார்கள். மேலும் குஜராத் மாநிலம் ஒளிர்வதாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால் உண்மையில் குஜராத் மாநிலம் வளர்ச்சியிலும், சுகாதாரத்திலும் பின்தங்கி இருக்கிறது. குஜராத் மாநிலத்தின் தலைநகர் அகமதாபாத் மாநகராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு 4 மணி நேரம் பணியாற்றினால் ரூ.105-ம் அல்லது 8 மணி நேரம் வேலை பார்த்தால் ரூ.210-ம் வழங்கப்படுகிறது. அதிக நேரம் பணியாற்றினாலும் இவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படுவதில்லை.
இந்த துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பி.எப்., இ.எஸ்.ஐ. வசதி எதுவும் அளிக்கப்படவில்லை. தற்காலிக ஊழியர்களாக 20 முதல் 30 ஆண்டுகள் வரை பணியாற்றி வருகிறார்கள். தற்காலிகமாக நீண்ட நாட்களாக பணியாற்றி வரும் தங்களை நிரந்தரப் பணியாளராக மாற்ற வேண்டும் என்று அரசிடம் கோரி வந்தனர். ஆனால் குஜராத் மாநிலம் ஒளிர்கிறது என்று கூறி வரும் மோடி அரசு இவர்களை நிரந்தரப் பணியாளர்களாக மறுத்து விட்டது. இதனால் குஜராத் மஸ்தூர் சபாவைச் சேர்ந்த அகமதாபாத் மாநகராட்சியின் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்ததைத் தொடங்கினார்கள். துப்புரவுத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நீடித்தால், அகமதாபாத் நகரம் நாறிவிடும் என்று மக்கள் அச்சம் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக